சாரதி அனுமதிப்பத்திரம் பற்றி வெளியான தகவல் Uncategorized

சாரதி அனுமதிப்பத்திரம் பற்றி வெளியான தகவல்

1 min read
💬 0

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (Department of Motor Vehicles) பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க (Nishantha Anurudtha Weerasinghe) தெரிவித்துள்ளார்.


சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளுக்கு அமைவாக, குறித்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.


அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததுமே பிரதான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பிரிவின் பேராசிரியர் மொஹமட் மஹீஷ் தெரிவித்துள்ளார்.
வாகனத்தை இயக்குவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.