டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு Uncategorized

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

1 min read
💬 0

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.


நாடு முழுவதிலும் உள்ள 8 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது நாடளாவிய ரீதியில் 42,730 பேர் டெங்கு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவ பெயர்ச்சி மழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் வைத்தியர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.