தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் Uncategorized

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

1 min read
💬 0

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு தொடர் உயர்வில் இருந்த தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாக குறைந்து வருகிறது.

இன்றைய (05.11.2024) நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 802,163 ரூபாவாக இருக்கிறது. அதே நேரத்தில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 28,300 ரூபாவாகவும், 24 கரட் தங்க பவுண் (8 கிராம்) 226,400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல, 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,950 ரூபாவாகவும், 22 கரட் தங்க பவுண் (8 கிராம்) 207,550 ரூபாவாகவும் உள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,770 ரூபாவாகவும், 21 கரட் தங்க பவுண் (8 கிராம்) 198,100 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை நிலவரத்தின் படி, 24 கரட் தங்க பவுண் (8 கிராம்) 218,500 ரூபாவாகவும், 22 கரட் தங்க பவுண் 202,000 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.