நாட்டின் ஏற்றுமதி வருமானம் பற்றி வெளியான தகவல் Uncategorized

நாட்டின் ஏற்றுமதி வருமானம் பற்றி வெளியான தகவல்

1 min read
💬 0

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை 2030 ஆம் ஆண்டளவில் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு 15 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் நாட்டின் ஏற்றுமதி செயல்திறன் 1,165.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என கூறப்படுகிறது.
கடந்த வருடத்தின் (2023) ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 4.18 சதவீத வளர்ச்சியாகும்.

தொழிற்சாலை ஆடைகள், தேயிலை, றப்பர் தொடர்பான பொருட்கள், தேங்காய் தொடர்பான பொருட்கள் மற்றும் மசாலா பொருட்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட ஏற்றுமதிகளின் வருவாய் அதிகரிப்பு காரணமாக இந்த வளர்ச்சி எட்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.