ரஷ்யாவின் இலங்கைக்கான குளிர்கால விமான சேவை Uncategorized

ரஷ்யாவின் இலங்கைக்கான குளிர்கால விமான சேவை

1 min read
💬 0

ரஷ்யாவின் Azur Air விமான சேவையானது இலங்கைக்கான குளிர்கால விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக மீண்டும் ஆரம்பித்துள்ளது.


முதல் விமானம் நேற்றைய தினம் (நவம்பர் 06) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்துள்ளது. குறித்த விமானம் காலை 10:05 மணிக்கு 332 பயணிகளுடன் வந்தடைந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏவியேஷன் சர்வீசஸ் லிமிடெட் விமானத்தை சம்பிரதாய நீர் பீரங்கி வணக்கத்துடன் வரவேற்றது, இலங்கை சுற்றுலா பயணிகளை வாழ்த்துவதற்காக பாரம்பரிய கண்டிய நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ரஷ்யாவில் வெனுகோவ், டோல்மோசேவ், க்ரானோயார்ஸ்க் மற்றும் சென் பீட்டர்ஸ்பர்க் சோச்சி ஆகிய பகுதிகளிலிருந்து வாரத்திற்கு 5 விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.