வளிமண்டளவியல் திணைக்களத்தினால் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னறிவிப்பு Uncategorized

வளிமண்டளவியல் திணைக்களத்தினால் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னறிவிப்பு

1 min read
💬 0

தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 23ஆம் திகதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதன்பின், அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்த அமைப்பு மேலும் தீவிரமடைந்து இலங்கையின் கிழக்கு கடற்கரைக்கு நகரலாம். இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.