விவசாயிகளுக்கான உர மானியம் வழங்கும் திகதி அறிவிப்பு Uncategorized

விவசாயிகளுக்கான உர மானியம் வழங்கும் திகதி அறிவிப்பு

1 min read
💬 0

நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை(14.10.2024) அம்பாறை மாவட்டத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அம்பாறையை தொடர்ந்து, பொலன்னறுவை, அநுராதபுரம், மஹியங்கனை மற்றும் மகாவலி பிரதேசங்களில் உள்ள விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.