இளைஞர் தலைமைத்துவப் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு முக்கிய செய்திகள்

இளைஞர் தலைமைத்துவப் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

1 min read
💬 0

இளைஞர் தலைமைத்துவப் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மனிதநேயம் நிதியத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட Youth Leadership Training Programme (YLTP) இளைஞர் தலைமைத்துவப் பயிற்சியை நிறைவு செய்த இளைஞர், யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 29.10.2026 வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வை வாழும் கலை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த பயிற்சி நெறிக்கான நிதி அனுசரணையை மனிதநேயம் நம்பிக்கை நிதியம் வழங்கியதுடன் இதற்கான முழுமையான ஒத்துழைப்பை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயகம் வழங்கியிருந்தது.

நிர்மான கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை அதிகாரியும் வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சி இணைப்பாளருமான திரு. கந்தவேல் அருள்நிதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்தன் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் திரு. குணநாயகம் பிரணவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. புருசோத்தமன் திவிதரன், வாழும் கலை அமைப்பின் செயலாளர் திருமதி யசோதா சிவஞானசுந்தரம், திரு. கந்தவேல் அருள்நிதி நிர்மான கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை அதிகாரியும் வாழும் கலை அமைப்பின் நிகழ்ச்சி இணைப்பாளர், திருமதி சுபார்த்தினி உதயகாந்தன் உளவளத்துறை உதவியாளர் , விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சியை நிறைவு செய்த இளைஞர், யுவதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பயிற்சியில் பங்கேற்ற இளைஞர், யுவதிகள் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன், பயிற்சியின் ஆரம்பத்தில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் நிறைவில் தங்களிடையே ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும், பயிற்சியின் மூலம் பெற்ற அனுபவங்களையும் தலைமைத்துவத் திறன்களையும் தமது கிராமங்களிலுள்ள பாடசாலை மாணவர்களிடமும் கொண்டு செல்ல விருப்பம் தெரிவித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்தன், இளைஞர், யுவதிகளுக்கு மட்டுமன்றி அனைத்துத் தரப்பினருக்கும் இவ்வாறான பயிற்சிகள் அவசியமானவை எனக் குறிப்பிட்டார். மேலும், அரச அலுவலகப் பணியாளர்களுக்கும் இத்தகைய பயிற்சிகள் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.

உதவி மாவட்ட செயலாளர் திரு. குணநாயகம் பிரணவன் கருத்துத் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளிடையே காணப்படும் தற்கொலைச் சம்பவங்கள் பெரும் சவாலாக உள்ளதாகக் குறிப்பிட்டார். போதிய கல்வியறிவு இருந்தபோதிலும், உணர்ச்சிகளைக் கையாளும் திறன் இன்மை இத்தகைய நிலைமைகளுக்கு ஒரு காரணமாக அமையக்கூடும் எனத் தெரிவித்த அவர், இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகளின் அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும், எதிர்காலத்தில் மாவட்ட செயலகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் இளைஞர்களை இத்திட்டத்தில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது, பயிற்சியை நிறைவு செய்த இளைஞர், யுவதிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1668 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.