களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற தொழில் சந்தை முக்கிய செய்திகள்

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற தொழில் சந்தை

1 min read
💬 0

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற தொழில் சந்தை

மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களமும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய தொழில் சந்தை, 14.08.2026 அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற தொழில் சந்தை

இத்தொழில் சந்தையில் பல்வேறு கல்வி மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் கலந்துகொண்டு, இளைஞர்கள் மற்றும் தொழில் வாய்ப்பை எதிர்பார்க்கும் நபர்களுக்கு தமது நிறுவனங்கள், வழங்கப்படும் பயிற்சிகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் தொடர்பான தகவல்களை வழங்கினர்.

இதன்போது, விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி (VCOT) சார்பாக கல்லூரியின் சேவையாளர்கள் கலந்துகொண்டு, கல்லூரியின் செயற்பாடுகள், நோக்கம், தொழிற்பயிற்சிகள் மற்றும் இளைஞர்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் பங்கேற்பாளர்களுக்கு தெளிவுபடுத்தல்களை வழங்கினர்.

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற தொழில் சந்தை

மேலும், இத்தொழில் சந்தையில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி, ICBT, OCBTE, Ceylon Nursing, Union Assurance உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் கலந்துகொண்டு தமது கல்வி, பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகள் தொடர்பான தகவல்களை வழங்கியிருந்தன.

இவ்வாறான தொழில் சந்தைகள் மூலம் இளைஞர்கள் தமக்குப் பொருத்தமான தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழிற்பயிற்சிகளை அடையாளம் காண்பதுடன், எதிர்கால தொழில் வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்