மட்டக்களப்பில் இந்திய முதலீட்டாளர்களுடனான தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர் மாநாடு முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இந்திய முதலீட்டாளர்களுடனான தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர் மாநாடு

1 min read
💬 0

மட்டக்களப்பில் இந்திய முதலீட்டாளர்களுடனான தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர் மாநாடு

மட்டக்களப்பு மாவட்டத்தின் தொழில் மற்றும் முதலீட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில், இந்தியாவிலிருந்து வருகை தரும் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கிடையிலான மாநாடு 17.09.2026 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை பழைய மாவட்ட செயலக பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, இந்திய முதலீட்டாளர்களுடன் நேரடியாக கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளவும், தமது தொழில் முயற்சிகளை அறிமுகப்படுத்தவும், எதிர்கால முதலீடு, வர்த்தகம் மற்றும் வணிக ஒத்துழைப்புகளுக்கான வாய்ப்புகளை ஆராயவும் மட்டக்களப்பு மாவட்ட தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டது.

இம்மாநாட்டில் இந்திய தொழில் முதலீட்டாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர், தொழில் முனைவோர் அமைப்புகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்கு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், கல்லூரி சார்பாக பயிற்சி முகாமையாளர் திரு. சா. கிரேசியன் மற்றும் கல்லூரியின் வளவாளர் திரு. ஆர். ஜோயல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தொழில் முனைவோரின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், புதிய முதலீட்டு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் தளமாக இம்மாநாடு அமைந்தது.

இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் (BDCCIA) மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகக் கூட்டு ஆகியவற்றின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்