புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கிளைகளில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள்
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கிளைகளில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகள் 17.09.2026 மற்றும் 18.09.2026 ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்பட்டன.
டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இச்செயற்பாட்டில், கல்லூரியின் பணியாளர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க பயிலுனர்கள் பங்குபற்றி சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.
இதன்போது, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றுதல் மற்றும் சுற்றுச்சூழலை தூய்மையாகப் பேணுதல் தொடர்பான நடைமுறைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
டெங்கு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை பயிலுனர்களிடையே ஏற்படுத்துவதுடன், சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கிலும் இச்செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.