விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட நன்கொடையாளர்கள்
06.08.2026 அன்று அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த திருமதி தேவி , திரு. பாலச்சந்திரன் மற்றும் கனடாவைச் சேர்ந்த திருமதி கஜேந்தி ரமேஷ் ஆகியோர் மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது, கல்லூரியின் வளர்ச்சி, முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு செயற்பாடுகள், கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

கல்லூரியின் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சமூகப் பங்களிப்பு, இளைஞர் வலுவூட்டல், தொழிற்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து நன்கொடையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.



இந்நிகழ்வில், கல்லூரியின் முதல்வர் திரு. த. சந்திரசேகரம் மற்றும் கல்லூரியின் முகாமையாளர் திருமதி க. ஹிந்துஜா ஆகியோரும் கலந்துகொண்டு தேவையான விளக்கங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வரும் வெளிநாட்டு நன்கொடையாளர்களின் இவ்விஜயம், கல்லூரியின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய சந்திப்பாக அமைந்தது.




மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.