இராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழா ரதபவனி முக்கிய செய்திகள்

இராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழா ரதபவனி

1 min read
💬 0

இராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழா ரதபவனி

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை (1926–2026) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தெய்வீக ரதபவனி 03.10.2026 சனிக்கிழமை காலை காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் சாரதா இல்லத்திலிருந்து கோலாகலமாக ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாநில இராமகிருஷ்ண மிஷனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜி அவர்களின் முன்னிலையில் ஆரம்பமான இப்புனித ரதபவனியில், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவி மற்றும் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் திருவுருவங்களைத் தாங்கிய ரதம் பவனி வந்தது.

03.10.2026 சனிக்கிழமை காரைதீவு முதல் குருக்கள்மடம் வரையும், 04.10.2026 ஞாயிற்றுக்கிழமை குருக்கள்மடம் முதல் கல்லடி–உப்போடை வரையும் ரதபவனி இடம்பெற்றது.

வழிநெடுகிலும் பக்தர்கள் ரதபவனியை வரவேற்று பூரண கும்ப மரியாதை, மாலை அணிவித்தல் மற்றும் ஆரத்தி உள்ளிட்ட வழிபாட்டு முறைகளின் மூலம் தங்களது பக்தியையும் அன்பையும் வெளிப்படுத்தினர்.

இதேவேளை, 04.10.2026 ஞாயிற்றுக்கிழமை ரதபவனி விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியை வந்தடைந்தபோது, கல்லூரி வளாகத்தில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டதுடன், ரதபவனிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தாகசாந்தி நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்