ஒருவருக்கு ஒரு விஷயத்தில் ஆழமான ஈடுபாடு (Interest) இருந்தால், அது ஒரு பொழுதுபோக்கு (Hobby) ஆகலாம். ஆனால், அதை தீவிரமாக, தொடர்ந்து செய்தால், அது ஒரு Passion ஆக மாறலாம். Passion என்பது, பணம், புகழ், சமூக அங்கீகாரம் எல்லாவற்றையும் தாண்டி, மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் செயலாக இருக்கும். "அவன் எப்போதும் கேம் விளையாடிக் கொண்டிருப்பான், அதுவே அவனுக்கு அடிக்ஷன்!" என ஒருவர் சொல்லும்போது, மற்றொருவர் "அவன் உண்மையில் அதில் நாட்டம் கொண்டிருக்கிறான். அது அவனது Passion" என்று பதில் சொல்லலாம். சிலருக்கு நடனம் ஆடுதல், சிலருக்கு விளையாட்டில் கலந்துகொள்ளுதல், சிலருக்கு சமூக வலைதளங்களில் நேரம் செலவிடுதல், சிலருக்கு உணவு சமைத்தல் இவை எல்லாம் நம்முடைய ஆர்வங்களை பிரதிபலிக்கலாம். ஆனால், அதை ஒரு முழுமையான தொழில் வாய்ப்பாக மாற்ற முடியுமா? இந்தக் கேள்விக்கான விடையை நமது சமூகத்தில் வெற்றி கண்ட சிலரின் கதைகளுடன் பார்ப்போம். Hobby Vs Passion – என்ன வித்தியாசம்?…