2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த நடவடிக்கைகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாக அதன் உபதலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.