பிரேக்கிங்

முக்கிய செய்திகள்

மாவிலங்கத்துறை கிராம மாணவர்களின் கணினிக் கல்வி மேம்பாட்டிற்காக 4 மடிக்கணினிகள் கையளிப்பு

மாவிலங்கத்துறை கிராம மாணவர்களின் கணினிக் கல்வி மேம்பாட்டிற்காக 4 மடிக்கணினிகள் கையளிப்பு
மாவிலங்கத்துறை கிராம மாணவர்களின் கணினிக் கல்வி மேம்பாட்டிற்காக 4 மடிக்கணினிகள் கையளிப்பு

மாவிலங்கத்துறை கிராம மாணவர்களின் கணினிக் கல்வி மேம்பாட்டிற்காக 4 மடிக்கணினிகள் கையளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள மாவிலங்கத்துறை கிராம மாணவர்களின் கணினி அறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் நான்கு மடிக்கணினிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

டுபாயில் இயங்கி வரும் R K L Lanka Electromechanical Works Contracting LLC நிறுவனத்தின் பணிப்பாளர்களான திரு. ரிஸான் மன்சூர் மற்றும் திரு. நல்லதம்பி உதயகுமார் ஆகியோரின் பங்களிப்புடன் குறித்த மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் கடந்த ஐந்து வருடங்களாக மாதிரிக் கிராமமாகத் தெரிவுசெய்யப்பட்ட மாவிலங்கத்துறை கிராமத்தின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் கிராமங்களில் கணினிக் கற்கைப் பிரிவுகளை உருவாக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கணினிக் கற்கை அலகொன்றை உருவாக்கும் நோக்கில், குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்கள் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டு நான்கு மடிக்கணினிகளையும் பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.

இதன் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பக் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் எதிர்காலக் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் இப்பங்களிப்பு உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, மண்முனைப்பற்று பிரதேசத்தில் இயங்கி வரும் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான புகலிட நிலையத்திற்கும் விஜயம் மேற்கொண்ட நிறுவனத்தின் பணிப்பாளர்கள், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு சத்துணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தனர்.

இதில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன், கல்லூரியின் திட்ட முகாமையாளர் திருமதி.ஹ.கிந்துஜா, திட்ட உத்தியோகஸ்தர் தி.சங்கியா ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

வேலைவாய்ப்பு