மட்டக்களப்பு சர்வமத ஒன்றியத்தின் திறன் மேம்பாட்டிற்கான டிஜிட்டல் அறிவுத்திறன் பயிற்சியின் இரண்டாம் நாள் அமர்வு
மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் (Inter Religious Federation – IRF) உறுப்பினர்களின் டிஜிட்டல் அறிவையும் நடைமுறைத் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில், கரித்தாஸ் எகெட் (Caritas EHED) நிறுவனத்தின் கபோட் சமாதானத் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட டிஜிட்டல் அறிவுத்திறன் பயிற்சியின் இரண்டாம் நாள் அமர்வு 2026 நவம்பர் 19ஆம் திகதி விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு மதங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மக்களிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வரும் மட்டக்களப்பு சர்வமத ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டுச் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக இப்பயிற்சி அமர்வு முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில் இரண்டாவது நாள் அமர்வான 19/11/2026 அன்று டிஜிட்டல் ஊடகத்தினால் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட சாதக மற்றும் பாதக விளைவுகள்இ டிஜிட்டல் ஊடகத்தின் நன்மை மற்றும் தீமைகள் மற்றும் டிஜிட்டல் ஊடாக எவ்வாறான குற்றங்கள் இடம்பெறுகின்றன என்பது தொடர்பிலான விரிவான விடையங்கள் தொடர்பில் அமர்வு இடம்பெற்றது.
இப்பயிற்சியின் ஊடாக சர்வமத ஒன்றியத்தின் உறுப்பினர்கள் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களைத் தன்னம்பிக்கையுடன் பயன்படுத்துவதற்கும், தமது அன்றாடச் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும் தேவையான அறிவையும் நடைமுறைத் திறன்களையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.





மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.





