கிரானில் Jophiel Child Development Project ஊழியர்களுக்கு ‘AI for Office Productivity’ பயிற்சி முக்கிய செய்திகள்

கிரானில் Jophiel Child Development Project ஊழியர்களுக்கு ‘AI for Office Productivity’ பயிற்சி

1 min read
💬 0

கிரானில் Jophiel Child Development Project ஊழியர்களுக்கு ‘AI for Office Productivity’ பயிற்சி

Jophiel Child Development Project ஊழியர்களுக்காக ‘AI for Office Productivity’ என்ற தலைப்பிலான ஒருநாள் பயிற்சி நிகழ்வு 11.09.2026 அன்று கிரான் பகுதியில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் 13 பேர் கலந்துகொண்டதுடன், அன்றாட அலுவலகப் பணிகளில் AI தொழில்நுட்பத்தை எவ்வாறு பயனுள்ள முறையில் பயன்படுத்தலாம் என்பது தொடர்பான விரிவான பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டனர்.

பயிற்சியின் போது ஆவணத் தயாரித்தல், தொழில்முறை மின்னஞ்சல் மேலாண்மை, அறிக்கைகள் மற்றும் கடிதங்கள் தயாரித்தல், தரவு பகுப்பாய்வு, உள்ளடக்க உருவாக்கம் மற்றும் விளக்கக்காட்சி (Presentation) தயாரித்தல் உள்ளிட்ட அலுவலகப் பணிகளை AI கருவிகளைப் பயன்படுத்தி விரைவாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ளும் முறைகள் தொடர்பில் செயன்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும், Effective Prompting தொடர்பான நடைமுறைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டதுடன், AI கருவிகளிலிருந்து துல்லியமான மற்றும் தரமான பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

இப்பயிற்சிப் பட்டறைக்கான வளவாளராக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளவாளர் R. Joyel கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினார்.

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது இளைஞர், யுவதிகளுக்கு தொழில்நுட்ப அறிவை பயிற்சிகள் மூலம் வழங்குவது மாத்திரமின்றி, அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் இவ்வாறான ஒருநாள் பயிற்சிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்