Ai for office productivity முக்கிய செய்திகள்

Ai for office productivity

🔄 Updated:
1 min read
💬 0

Ai for office productivity

அலுவலகப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தி உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில் “AI for Office Productivity” என்ற தலைப்பிலான செயலமர்வு வெற்றிகரமாக நடைபெற்றது.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தைச் சேர்ந்த 30 உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், அன்றாட அலுவலகப் பணிகளில் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்பான விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இதன்போது, ஆவணத் தயாரித்தல், தொழில்முறை மின்னஞ்சல் முகாமைத்துவம், அறிக்கைகள் தயாரித்தல், தரவு பகுப்பாய்வு, உள்ளடக்க உருவாக்கம், Presentation தயாரித்தல் மற்றும் AI கருவிகளைப் பயன்படுத்தி அலுவலகப் பணிகளை விரைவாகவும் திறமையாகவும் மேற்கொள்ளும் முறைகள் குறித்து செயன்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மேலும், Effective Prompting தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், AI கருவிகளிலிருந்து துல்லியமான மற்றும் பயனுள்ள பெறுபேறுகளைப் பெறுவதற்கான நடைமுறை வழிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

இச்செயலமர்வில் கலந்துகொண்ட 30 உத்தியோகத்தர்களும், தங்களது அன்றாட பணிகளில் AI தொழில்நுட்பத்தை பொறுப்புடனும் பயனுள்ளதாகவும் பயன்படுத்துவதற்கான அறிவையும் நடைமுறை அனுபவத்தையும் பெற்றுக்கொண்டனர்.

டிஜிட்டல் மாற்றத்திற்கேற்ப அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நோக்கில், இவ்வாறான AI திறன் மேம்பாட்டு செயலமர்வுகளை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்