“AI for Office Productivity” செயலமர்வு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது
அலுவலகப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தி உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நோக்கில் “AI for Office Productivity” என்ற தலைப்பிலான செயலமர்வு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.



களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தைச் சேர்ந்த 50 உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், அன்றாட அலுவலகப் பணிகளை எளிமையாகவும் விரைவாகவும் மேற்கொள்வதில் AI தொழில்நுட்பத்தின் பங்கு தொடர்பான விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இதன்போது, ஆவணத் தயாரித்தல், தொழில்முறை மின்னஞ்சல் மேலாண்மை, அறிக்கைகள் தயாரித்தல், தரவு பகுப்பாய்வு, உள்ளடக்க உருவாக்கம், விளக்கக்காட்சி (Presentation) தயாரித்தல் மற்றும் பல்வேறு AI கருவிகளை அலுவலகப் பணிகளில் திறம்பட பயன்படுத்தும் முறைகள் குறித்து செயன்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.



அரச நிறுவனங்களின் டிஜிட்டல் மாற்றத்தை வலுப்படுத்தி, அலுவலக உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான AI திறன் மேம்பாட்டு செயலமர்வுகளை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.