மட்டக்களப்பு கல்லடியில் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழா – தாகசாந்தி நிகழ்வை ஏற்பாடு செய்த VCOT
மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 2026 நவம்பர் 12 முதல் 15 வரை பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன் ஒரு பகுதியாக, 14.11.2026 அன்று நூற்றாண்டு நினைவுச் சின்னம் திறந்து வைக்கும் நிகழ்வும் விவேகானந்தர் சிலை திறப்பு விழாவும் நடைபெற்றன.
இந்நிகழ்வில், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் விசேட தாகசாந்தி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு, விழாவில் கலந்துகொள்ள வருகை தந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சர்பத் வழங்கப்பட்டது.
விழாவில் கலந்துகொண்ட மக்களின் தாகத்தைத் தீர்க்கும் நோக்கில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் முன்னெடுக்கப்பட்ட இத்தாகசாந்தி நிகழ்வு, கல்லூரியின் சமூகப் பங்களிப்பாக அமைந்தது.




மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.





