தொழில் வழிகாட்டுதல் பயிற்சிநெறிகள் மாத்திரமின்றி மாணவர்களின் திறன்வள மேம்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்து வரும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி, தனது பயிலுனர்களுக்காக மேலும் ஒரு பயனுள்ள கற்றல் அனுபவத்தை வழங்கியது.
2026 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி, மட்டக்களப்பில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள பொது நூலகத்திற்கு கல்லூரி மாணவர்கள் கல்விசார் விஜயமாக அழைத்து செல்லப்பட்டனர். இந்நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டத்தின் உதவி மாவட்ட செயலாளர் திரு. G. பிரணவன் அவர்களின் அழைப்பின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விஜயத்தின் போது, மாணவர்களின் தொடர்பாடல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக செயன்முறை அடிப்படையிலான கற்றல் முறைகள் பயன்படுத்தப்பட்டு, மாணவர்கள் கதாப்பாத்திரங்களை ஏற்று நாடக வடிவில் செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் மூலம் தொடர்பாடலின் முக்கியத்துவம் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் விளக்கப்பட்டது.
மேலும், இந்நிகழ்வு மாணவர்களின் தன்னம்பிக்கை, குழு ஒருங்கிணைப்பு திறன் மற்றும் பொதுமக்கள் முன் கருத்துகளை வெளிப்படுத்தும் திறனை வளர்க்கும் வகையில் அமைந்திருந்தது. கற்றலுடன் அனுபவத்தையும் இணைக்கும் இந்த முயற்சி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
தொழில்நுட்ப கல்வியுடன் சமூக மற்றும் தனிநபர் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி, இவ்வாறான பயிற்சிகள் மற்றும் வெளிக்கழக செயற்பாடுகள் மூலம் இளைஞர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்தி வருகிறது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.