அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கு புதிய கட்டிடம் முக்கிய செய்திகள்

அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கு புதிய கட்டிடம்

🔄 Updated:
1 min read
💬 0

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது கல்வி, சமூக வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு போன்ற துறைகளில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் ஒரு சமூக சேவை அமைப்பாகும். பின்தங்கிய சமூகங்களை மையமாகக் கொண்டு குழந்தைகள், மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த அறக்கட்டளை தனது சேவைகளை முன்னெடுத்து வருகிறது.

2019 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையால் ஆரம்பிக்கப்பட்ட அன்னை ஸ்ரீ சாரதா நிலையம், இன்று பல மாணவிகளின் கல்வி பயணத்திற்கு உறுதியான ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையத்தில் மாணவிகளுக்கு கல்வி உதவியுடன் உணவு, உடை, வழிகாட்டுதல் மற்றும் ஒழுக்க வளர்ச்சி தொடர்பான பல்வேறு ஆதரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், இதுவரை வாடகை கட்டடங்களில் இயங்கி வந்த அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கு, அதன் மீது அக்கறை கொண்ட பல்வேறு தரப்பினரின் முயற்சியினாலும், புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நல்உள்ளங்களின் நிதி அனுசரணையினாலும், அரசாங்கத்தினால் காணி வழங்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

அதன் திறப்பு விழா 04.03.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் தலைவர் திரு.பொன்.பேரின்பநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராமகிருஷ்ணமிஷன் இலங்கைக்கிளையின் தலைவர் ஸ்ரீமத் அக்க்ஷராத்மானந்தஜீ மஹராஜ் இராமகிருஷ்ண சாரதாமிஷன் இலங்கைக்கிளையின் தலைவி ப்ரவ்ராஜிகா ஆத்மதேவ ப்ராணா ஆகியோர் ஆத்மீக அதிதிகளாக வருகை தந்ததுடன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்.திரு.சி.ஜெயகாந் அவர்கள், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி.ப.சத்தியரூபன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.

கௌரவ அதிதிகளாக வைத்தியகலாநிதி வே.பரமநாதன் (இலண்டன்), எந்தரி.கு.அருணகுமார்(இலண்டன்), மற்றும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் புதிய கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கும் அதன் திறப்பு விழாவிற்கும் உறுதுணையாக செயற்பட்ட நன்கொடையாளர்கள் வைத்தியகலாநிதி வே.பரமநாதன் (இலண்டன்), எந்தரி.கு.அருணகுமார்(இலண்டன்) மற்றும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் ஆகியோர் மற்றும் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் தலைவர், முகாமையாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டதோடு ஆத்மீக அதிதிகளாக வருகை தந்த இராமகிருஷ்ணமிஷன் இலங்கைக்கிளையின் தலைவர் ஸ்ரீமத் அக்க்ஷராத்மானந்தஜீ மஹராஜ் மற்றும் இராமகிருஷ்ண சாரதாமிஷன் இலங்கைக்கிளையின் தலைவி ப்ரவ்ராஜிகா ஆத்மதேவ ப்ராணா ஆகியோரும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் ஆரம்பகால கட்டம் முதல் இன்று வரை நடைமுறைப்படுத்த செயற்பாடுகள், மாணவர்களின் அடைவுமட்டங்கள், மற்றும் எதிர்காலத் திட்டங்கள் உள்ளடங்கலாக “மங்கையர் எழுச்சி” நூல் வெளியிடப்பட்டதோடு பிரதிகளும் முகாமையாளரால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிலையத்தில் கல்விமேம்பாடு, திறன்விருத்தி, இயற்கை விவசாயம், உற்பத்தித்துறை ஆகிய செயற்பாடுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதோடு மாணவர்களுக்கான தங்குமிட வசதி மற்றும் கலாசார மண்டபம் போன்றவை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை தொடர்பில் தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கு புதிய கட்டிடம்
அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கு புதிய கட்டிடம்
அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கு புதிய கட்டிடம்

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.