ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை Uncategorized

ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை

1 min read
💬 0

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வானது திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் தொலைவிலும், காங்கேசன்துறைக்கு கிழக்கே 290 KM தொலைவிலும் இரவு 11.30 மணியளவில் நிலைகொண்டது. தீவின் வானிலையில் இந்த அமைப்பின் தாக்கம் இன்று (29) பின்னர் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வட மாகாணத்தின் சில இடங்களில் 100mm அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். மாலை அல்லது இரவில் தீவின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60KM வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.