இன்று முதல் வானிலையில் மாற்றம் Uncategorized

இன்று முதல் வானிலையில் மாற்றம்

1 min read
💬 0

இன்று (27) முதல் அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான தன்மை காரணமாக இந்த மழையுடனான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் அளவான கனமழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவான பலத்த மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.