இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு Uncategorized

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

1 min read
💬 0

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் இன்று (4) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் ஓரளவு மழை பெய்யக்கூடும்.

மேலும், இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை கோரியுள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.