இலங்கைக்கு கிடைக்கவுள்ள 100 மில்லியன் டொலர் உதவி! Uncategorized

இலங்கைக்கு கிடைக்கவுள்ள 100 மில்லியன் டொலர் உதவி!

1 min read
💬 0

இலங்கைக்கு முதற்கட்டமாக 100 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. நீர்வழங்கல் மற்றும் சுகாதார நல மீள் கட்டமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, இந்த நிதியுதவி பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 2 கடன் வசதிகளை ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து பெற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அதன் முதலாவது வேலைத்திட்டமான காலநிலை தாங்குதிறன், அனைத்து தரப்பினரையும் உள்வாங்கல், சுற்றாடல் பேண்தகு நிலைமையை வலுப்படுத்தல் என்பவற்றுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.