உடனடியாக கைது செய்யபடுவீர்கள்! Uncategorized

உடனடியாக கைது செய்யபடுவீர்கள்!

1 min read
💬 0

தேர்தல் முடிவுகளை பெரிய திரைகளை பயன்படுத்தி, வீதிகளின் அருகில் ஒன்று கூடி பார்க்கும் தரப்பினரை கலைக்கவோ அல்லது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவோ வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (19) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை இடம்பெறும் போது அந்த முடிவுகளை தொலைக்காட்சிகள் அல்லது பெரிய திரைகளை பயன்படுத்தி வீதிகளின் அருகில் ஒன்று கூடி பார்ப்பது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வாக்கு எண்ணிக்கையின் போது, ​​முடிவுகள் ஒளிபரப்பப்படும் போது குழுவாகத் திரண்டு, பட்டாசுகளை வெடித்தல், வீதிகளில் வினோதமாக இருத்தல், உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு சட்டத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை வாக்குப்பதிவுக்கு பிறகு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது, ​​எக்காரணம் கொண்டும் வீடுகளை விட்டும், வாக்கும் எண்ணும் நிலையங்களுக்கு அருகில் அல்லது வீதிகளில் இருக்க வேண்டாம்.இத்தகைய கூட்டங்கள் அனைத்தும் சட்டவிரோமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.