நள்ளிரவு முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறை Uncategorized

நள்ளிரவு முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறை

1 min read
💬 0

நாட்டில் நேற்று (26-09-2024) நள்ளிரவு முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. வீசா வழங்கும் நடைமுறை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையால் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன.

இதனையடுத்து அந்தச் செய்முறையை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் வீசா வழங்கலில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது பழைய முறைமையின் அடிப்படையிலேயே வீசா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.