பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை Uncategorized

பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

1 min read
💬 0

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், தேர்தல் முடிவுகளை பொது வெளியில் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது வெளியில் திரையிடுவதால் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படலாம்.

எனவே, வன்முறைகளைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்தவாறு தனிப்பட்ட முறையில் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.