வருமான வரி செலுத்துவோருக்கு இன்று இறுதி நாள் Uncategorized

வருமான வரி செலுத்துவோருக்கு இன்று இறுதி நாள்

1 min read
💬 0

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவோர் அனைவரும் இன்றே (30) செலுத்தி முடிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவரேனும் பணம் செலுத்தத் தவறினால் அல்லது தாமதப்படுத்தினால், அவர் சட்டத்தின்படி அபராதம் மற்றும் வட்டிக்கு உட்படுத்தப்படுவார் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், எந்தவொரு நபரும் எந்த வகையான வரிக்கும் செலுத்த வேண்டிய வரிகள் நிலுவையில் இருந்தால், அவை அனைத்தும் அக்டோபர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன் செலுத்தப்பட வேண்டும்.

அன்றைய திகதிக்குப் பின்னரும் செலுத்தப்படாத வரிகள் இருப்பின் அவற்றை மீளப்பெறுவதற்கு உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரகாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1944 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.