ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி Uncategorized

ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி

1 min read
💬 0

மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில், ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான நேற்றைய (30) பயிற்சி போட்டியில் இலங்கை மகளிர் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 58 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில், 59 என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 15.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.