கரடியனாறு சமுதாயக் கல்லூரியில் Cake Baking Course
கரடியனாறு சமுதாயக் கல்லூரியில் இளைஞர்களின் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் Cake Baking Course பயிற்சி நெறி தற்போது நடைபெற்று வருகின்றது.
இப்பயிற்சி நெறியின் மூலம் கேக் தயாரித்தல் மற்றும் பேக்கரி துறை சார்ந்த நடைமுறைத் திறன்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு பயிலுனர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக Cake Baking Course பயிலுனர்களுக்கான Life Skills Orientation Session 28.09.2026 அன்று நடைபெற்றதுடன், இதில் 7 பயிலுனர்கள் கலந்துகொண்டனர். இக்கருத்தரங்கினை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பயிற்சி முகாமையாளர் திரு. சார்ல்ஸ் கிரேசியன் அவர்கள் மேற்கொண்டார்.
கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் திறன்கள் மற்றும் எதிர்கால சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், கரடியனாறு சமுதாயக் கல்லூரியில் இவ்வாறான பல்வேறு பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




