டெங்கு நோயால் 13 பேர் உயிரிழப்பு முக்கிய செய்திகள்

டெங்கு நோயால் 13 பேர் உயிரிழப்பு

1 min read
💬 0

நடப்பாண்டில் இதுவரை 13 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் இதுவரை நாடு முழுவதும் 26,071 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கரா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், மார்ச் மாதம்: 6,013 நோயாளர்களும் ஏப்ரல் மாதம்: 5,662 நோயாளர்களும் மே 04ஆம் திகதி வரை: 809 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகளுடன் அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

பூச்சியியல் சோதனைகளின்படி, பாடசாலை வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் , அரச அலுவலக வளாகங்கள் மற்றும் தனியார் வீடுகள் ஆகியவை நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த வளாகங்களைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு மற்றும் சிக்கன்குனியா ஆகிய நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர் கபில கன்னங்கரா வலியுறுத்தியுள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்