இன்று நண்பகல் 12:12 மணிக்கு நிகழப்போகும் மாற்றம் முக்கிய செய்திகள்

இன்று நண்பகல் 12:12 மணிக்கு நிகழப்போகும் மாற்றம்

🔄 Updated:
1 min read
💬 0

நாட்டின் சில மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதேநேரம், சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு காரணமாக இன்று நண்பகல் நாட்டின் 8 முக்கிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை, சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு காரணமாக ஏப்ரல் 05 முதல் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேர் உச்சியில் காணப்படுகிறது.

அதற்கமைய, இன்றைய தினம் (09) நண்பகல் 12:12 மணியளவில் நாட்டின் சில பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

அதன்படி, சிலாபம், பிங்கிரிய, ஹல்மில்லவெவ, பண்டுவஸ்நுவர, கொகரெல்ல, கவுடுபெலல்ல, கொப்பவெளி மற்றும் கிரான்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.