பெண் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான Business Model Canvas செயலமர்வு முக்கிய செய்திகள்

பெண் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான Business Model Canvas செயலமர்வு

1 min read
💬 0

பெண் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான Business Model Canvas செயலமர்வு

17.06.2026 அன்று மட்டக்களப்பு, செங்கலடியில், செங்கலடி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெண் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான Business Model Canvas தொடர்பிலான செயலமர்வு சிறப்பாக நடைபெற்றது.

சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் பெண்களின் தொழில் அபிவிருத்தி, வணிக திட்டமிடல் மற்றும் தொழில் நிலைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, தொழில் ஆரம்பித்தல் மற்றும் விரிவுபடுத்தல் தொடர்பான அடிப்படை வழிமுறைகள், வாடிக்கையாளர் அடையாளப்படுத்தல், வருமான வழிகள், வள முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் உத்திகள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான திட்டமிடல் போன்ற விடயங்கள் விரிவாக விளக்கப்பட்டன.

குறிப்பாக, Business Model Canvas கருவியைப் பயன்படுத்தி ஒரு தொழிலின் முக்கிய கூறுகளை எவ்வாறு அடையாளம் கண்டு திட்டமிடுவது என்பது தொடர்பில் செயன்முறைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இதன் மூலம் பங்கேற்பாளர்கள் தங்களது தொழில்களை மேலும் திட்டமிட்ட முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கான அறிவையும் திறன்களையும் பெற்றுக்கொண்டனர்.

இச்செயலமர்வில் வளவாளராக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் தொழிற்பயிற்சி முகாமையாளர் திரு. சார்ல்ஸ் கிரேசியன் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளையும் தேவையான வழிகாட்டல்களையும் வழங்கினார்.

பெண்களின் பொருளாதார வலுவூட்டல் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு இவ்வாறான செயலமர்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

பெண் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான Business Model Canvas செயலமர்வு

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்