கரடியனாறு சமுதாயக் கல்லூரிக்கு மனிதநேய நம்பிக்கை நிதியக் குழுவினர் களவிஜயம்
மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் தலைவர் திருமதி அபிராமி கைலாசபிள்ளை, அமெரிக்காவிலிருந்து வருகை தந்த திரு. கைலாசபிள்ளை அரவிந்தன் மற்றும் அவர்களுடன் வருகை தந்த குழுவினர் 12.09.2026 அன்று கரடியனாறு சமுதாயக் கல்லூரிக்கு களவிஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது, சமுதாயக் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகள், கல்லூரியின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் பார்வையிடப்பட்டதுடன், கல்லூரியின் மேம்பாடு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலுக்கு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் K. Pratheeswaran, அதிபர் T. Sandrasegaram, தொழிற்பயிற்சி முகாமையாளர் C. Grashiyan ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், களவிஜயத்தின் போது கல்லூரியின் பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் மாணவர்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வாறான செயற்பாடுகள் கிராமப்புற இளைஞர்களின் கல்வி மற்றும் தொழில் திறன்களை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.


























மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.