பிரேக்கிங்

முக்கிய செய்திகள்

smart Agriculture, IoT & AI – Plant Nursery பயிற்சி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்

smart Agriculture, IoT & AI – Plant Nursery பயிற்சி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்
smart Agriculture, IoT & AI – Plant Nursery பயிற்சி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்

smart Agriculture, IoT & AI – Plant Nursery பயிற்சி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்

Smart Agriculture, IoT மற்றும் Artificial Intelligence (AI) தொழில்நுட்பங்களை Plant Nursery செயற்பாடுகளுடன் ஒருங்கிணைத்து நடைமுறைப் பயிற்சித் திட்டத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் 08.09.2026 அன்று Amirda நிறுவனத்தில் நடைபெற்றது.

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி (VCOT) மற்றும் World University Service of Canada (WUSC) இணைந்து முன்னெடுக்கும் Smart Agriculture செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, Smart Agriculture, IoT, Sensors, Automated Irrigation, AI மற்றும் Smart Nursery  உள்ளிட்ட 12 Modules தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றை NVQ Level 4 தேவைகளுடன் ஒருங்கிணைத்து நடைமுறை ரீதியாக மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

மேலும், Marketing, Sales & Promotion, Life Skills, Field Exposure மற்றும் OJT ஆகியவற்றை பயிற்சியில் இணைத்து, பயிற்சியாளர்களுக்கு தொழில்நுட்ப அறிவுடன் சுயதொழில் மற்றும் மேலதிக வருமான வாய்ப்புகளை உருவாக்கும் திறன்களை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், Plant Nursery அமைத்தல், Budding & Grafting போன்ற நடைமுறைப் பயிற்சிகள், Agriculture துறையில் OJT வாய்ப்புகள் மற்றும் விவசாயப் பிரச்சினைகளுக்கான IoT அடிப்படையிலான சந்தைப்படுத்தக்கூடிய தீர்வுகளை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலுக்கு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் K. Pratheeswaran, அதிபர் T. Sandrasegaram தொழில்ப்பயிற்சி முகாமையாளர் C. Grashiyan மற்றும் இந்த பயிற்சிக்கான போதனாசிரியர் R.Joyal , ஆகியோருடன் எமது கல்லூரியின் வளவாளர் குழாமில் உள்ள விவசாயத் திணைக்களத்தின் விவசாய போதனாசிரியர் K. Nishanthan, இயற்கை விவசாயம் மற்றும் கணினி மென்பொருள் துறை நிபுணர் S.Senthuran உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வேலைவாய்ப்பு