பிரேக்கிங்

முக்கிய செய்திகள்

காரைதீவு விவேகானந்த சமுதாயக் கல்லூரியில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

காரைதீவு விவேகானந்த சமுதாயக் கல்லூரியில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
காரைதீவு விவேகானந்த சமுதாயக் கல்லூரியில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

காரைதீவு விவேகானந்த சமுதாயக் கல்லூரியில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

காரைதீவு அன்னை ஸ்ரீ சாரதா கற்றல் மேம்பாட்டு நிலைய வளாகத்தில் விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற விவேகானந்த சமுதாயக் கல்லூரியில் (Community College) CareerFit and IT Course நிறைவு செய்த பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

45 பயிலுனர்கள் தமது பயிற்சிகளை முழுமையாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 12.09.2026 சனிக்கிழமை காரைதீவு விவேகானந்த சமுதாயக் கல்லூரியில் நடைபெற்றது.

மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம் மற்றும் மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான நிகழ்வில், பயிலுனர்களான Vinojan மற்றும் Vivitha ஆகியோர் இந்த பயிற்சி தமது வாழ்க்கையில் ஏற்படுத்திய நேர்மறையான மாற்றங்கள் தொடர்பில் அனுபவப் பகிர்வுகளை வழங்கினர்.

இதன்போது கல்லூரியின் செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் தலைவர் திருமதி அபிராமி கைலாசபிள்ளை, அமெரிக்காவிலிருந்து வருகை தந்த திரு. கைலாசபிள்ளை அரவிந்தன் மற்றும் அவர்களுடன் வருகை தந்த குழுவினர் காரைதீவு அன்னை ஸ்ரீ சாரதா கற்றல் மேம்பாட்டு நிலைய வளாகத்திற்கும் விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் சான்றிதழ் வழங்கும் நிகழ்விலும் கலந்துகொண்டனர்.

விவேகானந்த தொழில்நுட்பவில் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிகழ்வில் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன், கல்லடியின் உதவி முகாமையாளர் சுவாமி உமாதீசானந்தஜி அவர்கள் ஆசியுரை வழங்கியதுடன், மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். மனிதநேய நிதியத்தின் தலைவர் திருமதி. அபிராமி கயிலாசபிள்ளை மற்றும் அமெரிக்காவிலிருந்து வருகை தந்த திரு. கயிலாசபிள்ளை அரவிந்தன் ஆகியோரும் சிறப்புரையாற்றி சான்றிதழ்களையும் வழங்கினர்.

மேலும், சிரேஷ்ட ஊடகவியலாளர் மற்றும் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. சகாதேவராஜா, மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் வடமாகாண இணைப்பாளர் திரு. நடேசானந்தன், பாடசாலை அதிபர்கள், பயிற்சி நிலைய பொறுப்பாளர், VCOT முதல்வர், சேவையாளர்கள், பெற்றோர் மற்றும் பயிலுனர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பின்தங்கிய கிராமப்புற மாணவர்களைத் தேடிச் சென்று தொழில்நுட்பக் கல்வி மற்றும் வழிகாட்டல்களை வழங்கும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனின் வேண்டுகோளுக்கிணங்க, காரைதீவு அன்னை ஸ்ரீ சாரதா கற்றல் மேம்பாட்டு நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பயிற்சி நிலையத்தில் அடிப்படை கணினி மற்றும் ஆங்கிலப் பயிற்சிகளை வழங்குவதற்காக 17.02.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இப்பயிற்சியின் மூலம் பல மாணவர்களுக்கு பல்கலைக்கழக நுழைவுக்கு முன்னரான அடிப்படை கணினி மற்றும் ஆங்கில அறிவைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதுடன், உயர்கல்விக்குச் செல்ல முடியாத இளைஞர்களுக்கு அடுத்தகட்டமாக தெரிவுசெய்யக்கூடிய தொழிற்பயிற்சிகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் தொடர்பான தொழில் வழிகாட்டலையும் வழங்கியுள்ளது.

கிராமப்புற இளைஞர்களின் கல்வி மற்றும் தொழில் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இச்செயற்பாடு, உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் உயர்கல்வி அல்லது தொழிற்கல்விக்குச் செல்லும் இடைப்பட்ட காலத்தில் மாணவர்களைத் தயார்படுத்தும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.

வேலைவாய்ப்பு