மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு முக்கிய செய்திகள்

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

1 min read
💬 0

ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதன் நேரடி விளைவாக, சர்வதேச சந்தையில் மசகுஎண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஜூன் 2022க்குப் பிறகு முதன்முறையாக, ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 120 டொலரைத் தாண்டியுள்ளது.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருப்பது, நீண்டகால மோதல்கள் உருவாகுமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் இந்த அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல், உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த திடீர் விலை உயர்வு காரணமாக, வளரும் நாடுகள் உட்பட உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.