விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வூட்டும் மற்றும் தொழில் வழிகாட்டல் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 13.03.2026 அன்று விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் பயிலுனர்களுக்கு வாழ்க்கை திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் தொழிற்பயிற்சி முகாமையாளர் திரு. சார்ல்ஸ் கிரேசியன், அவர்களால் இந்த பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
தற்காலத்தில் மாணவர்களை வழி தவற வைக்கும் மற்றும் திசை திருப்பும் பல முயற்சிகளில் பல்வேறுபட்ட தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான சூழலில் சிக்கியுள்ள எமது எதிர்கால சந்ததியினருக்கு கல்வி அறிவு மாத்திரமல்லாது வாழ்க்கையின் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான செயற்பாடுகள் கல்லூரியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை சிறப்பம்சம் ஆகும்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.


