QUARTERLY DIGITAL PERFORMANCE REPORT சமர்ப்பிப்பு

1 min read
💬 0

QUARTERLY DIGITAL PERFORMANCE REPORT சமர்ப்பிப்பு

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் டிஜிட்டல் மற்றும் சமூக மேம்பாட்டுச் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யும் நோக்கில் QUARTERLY DIGITAL PERFORMANCE REPORT சமர்ப்பிப்பு மற்றும் விளக்கக்காட்சி நிகழ்வு 13.06.2026 சனிக்கிழமை Glamant Lagoon Hotel இல் நடைபெற்றது.

இந்நிகழ்வில், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் புதுக்குடியிருப்பு கிளை மற்றும் கொம்மாதுறை கிளையின் Performance Report, காரைதீவு சமுதாயக் கல்லூரியின் Performance Report மற்றும் அமிர்தா நிறுவனத்தின் Performance Report ஆகியவை தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அவற்றின் தற்போதைய முன்னேற்றங்கள், சவால்கள் மற்றும் அடைந்துள்ள பெறுபேறுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து திட்டங்களின் வளர்ச்சியையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கான செயற்றிட்டங்கள் மற்றும் டிஜிட்டல் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரியின் தொழிற்பயிற்சி முகாமையாளர் திரு. சார்ல்ஸ் கிரேசியன் அவர்கள் கல்லூரியின் ஊழியர்களுக்கு தேவையான சிறப்புப் பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் செயற்றிட்ட முகாமையாளர் திருமதி ஹ. கிந்துஜா, கல்லூரியின் முதல்வர் திரு. த. சந்திரசேகரம், கல்லூரியின் பயிற்றுவிப்பாளர்கள், அமிர்தா நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் தொடர்புடைய செயற்றிட்டங்களில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

திட்டமிடல், மதிப்பீடு மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப தரமான சேவைகளை வழங்குவதில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.