இளைஞர்களுக்கான சுயமேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் செயலமர்வு
01.08.2026 அன்று மட்டக்களப்பில் அமைந்துள்ள விபுலானந்தா மண்டபத்தில், ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இளைஞர்களுக்கான சுயமேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் செயலமர்வு சிறப்பாக நடைபெற்றது.
இளைஞர்களின் ஆளுமைத் திறன், தலைமைத்துவப் பண்புகள், குழு ஒருங்கிணைப்பு மற்றும் தொழில் உலகிற்கான தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், சமூகத்தின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் தங்களது நற்சிந்தனைகளையும் ஆற்றல்களையும் பயன்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
செயலமர்வின் ஆரம்பத்தில், பங்கேற்பாளர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கைதட்டல் (Clap Game) உள்ளிட்ட செயற்பாடுகள் மூலம் பரஸ்பர அறிமுகம் மற்றும் குழு ஒத்துழைப்பை மேம்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஒவ்வொருவரும் தங்களை சுருக்கமாக அறிமுகப்படுத்தும் Self Introduction அமர்வும் இடம்பெற்றது.
இதன்போது, Comfort Zone-ஐ விட்டு வெளியேறி புதிய அனுபவங்களை எதிர்கொள்வதன் மூலம் மட்டுமே புதிய திறன்களையும் அறிவையும் கற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், அது புதிய சிந்தனைகளையும் வாய்ப்புகளையும் உருவாக்கும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
மேலும், விளையாட்டுகளை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகள் ஊடாக தலைமைத்துவம், தொடர்பாடல் திறன், குழுப் பண்பாடு மற்றும் முடிவெடுக்கும் திறன் போன்ற வாழ்க்கைத்திறன்கள் பயிற்றுவிக்கப்பட்டன.

அத்துடன், வாழ்க்கையில் தெளிவான இலக்கை (Target) நிர்ணயித்து, அதனை அடைவதற்காக திட்டமிட்டு செயற்பட்டால் மட்டுமே குறுகிய காலத்தில் வெற்றியை அடைய முடியும் என்ற கருத்து Clap Game உள்ளிட்ட செயன்முறைப் பயிற்சிகள் மூலம் விளக்கப்பட்டது.
இவ்வாறான சுயமேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் செயலமர்வுகள், இளைஞர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தி, அவர்களை பொறுப்புணர்வும் தலைமைத்துவத் திறனும் கொண்ட சமூகப் பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.