“AI with Office Productivity” என்ற தலைப்பில் ஆரயம்பதி பிரதேச சபையில் நடைபெற்ற செயலமர்வு முக்கிய செய்திகள்

“AI with Office Productivity” என்ற தலைப்பில் ஆரயம்பதி பிரதேச சபையில் நடைபெற்ற செயலமர்வு

1 min read
💬 0

“AI with Office Productivity” என்ற தலைப்பில் ஆரயம்பதி பிரதேச சபையில் நடைபெற்ற செயலமர்வு

23.07.2026 அன்று ஆரயம்பதி பிரதேச சபையில், அலுவலகப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தி உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நோக்கில் “AI with Office Productivity” என்ற தலைப்பிலான செயலமர்வு வெற்றிகரமாக நடைபெற்றது.

இச்செயலமர்வில் 30 பேர் கலந்துகொண்டு, அன்றாட அலுவலகப் பணிகளில் AI தொழில்நுட்பத்தை எவ்வாறு பயனுள்ள முறையில் பயன்படுத்தலாம் என்பது தொடர்பான விரிவான பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டனர்.

பயிற்சியின் போது ஆவணத் தயாரித்தல், தொழில்முறை மின்னஞ்சல் மேலாண்மை, அறிக்கைகள் மற்றும் கடிதங்கள் தயாரித்தல், தரவு பகுப்பாய்வு, உள்ளடக்க உருவாக்கம், விளக்கக்காட்சி (Presentation) தயாரித்தல் மற்றும் AI கருவிகளைப் பயன்படுத்தி அலுவலகப் பணிகளை விரைவாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ளும் முறைகள் தொடர்பில் செயன்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும், Effective Prompting தொடர்பான நடைமுறைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டதுடன், AI கருவிகளிலிருந்து துல்லியமான மற்றும் தரமான பெறுபேறுகளைப் பெறுவதற்கான வழிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.

✍️ கருத்து தெரிவிக்கவும்