Berendina Development Service பயிலுனர்களுக்கான Trainees Development Workshop
பயிலுனர்களின் ஆளுமைத் திறன், தொடர்பாடல் திறன் மற்றும் வேலைவாய்ப்பு தகைமைகளை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், நேர்முகத் தேர்வை (Interview) தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது தொடர்பான விரிவான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
செயலமர்வின் ஆரம்பத்தில், Trainee Introductions with Activity என்ற அமர்வின் மூலம், பங்கேற்பாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும் வகையில் சுவாரஸ்யமான செயற்பாடுகள் இடம்பெற்றன. இது பயிலுனர்களிடையே பரஸ்பர அறிமுகத்தையும் நட்புறவையும் மேம்படுத்த உதவியது.


அதனைத் தொடர்ந்து நடைபெற்ற Motivational Session இல், நிஜ வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட ஊக்கமளிக்கும் கருத்துக்கள் பகிரப்பட்டதுடன், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது, சவால்களை எதிர்கொள்வது மற்றும் தொழில் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டிய மனப்பாங்கு தொடர்பிலும் பயிலுனர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
மேலும், Outdoor Team Building Activity மூலம் குழு ஒத்துழைப்பு, தலைமைத்துவம், தொடர்பாடல் திறன் மற்றும் பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கும் வகையில் பல்வேறு வெளிப்புற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.



மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.