விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பின்தங்கிய கிராமப் பிரதேசங்களில் வாழும் மற்றும் கற்றலில் ஆர்வமுள்ள, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மாணவர்களுக்கு புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் சமூக மாற்றத்திற்கான பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில், மாவிலங்கத்துறை எனும் கிராமத்தைத் தெரிவுசெய்து, அவர்களுக்கான செயற்பாடுகள், இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் உள்ளிட்ட மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளையும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது முன்னெடுத்து வருகின்றது.
அதன் அடிப்படையில், மாவிலங்கத்துறையில் பயிலும் தரம் 6 முதல் 10 வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில மற்றும் சிங்கள வகுப்புகள் கடந்த ஒரு வருட காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், அம்மாணவர்களுக்கான அடையாள அட்டைகள் மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டிருந்தன.
தற்போது, அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கமைய, திரு. ராஜரெட்ணம் ஜீவகன் அவர்களின் அனுசரணையில் 24 மாணவர்களுக்கான சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டன.
விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவிலங்கத்துறை கிராம சமூக நலன்புரிச் சங்கத்தின் ஸ்தாபகர் திரு. காசிநாதன், சமூக நலன்புரிச் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், போசகர் மற்றும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஐயனார் ஸ்ரீ படபத்திரகாளியம்மன் ஆலய பரிபாலன சபையினர், அறக்கட்டளையின் சேவையாளர்கள் மற்றும் மாவிலங்கத்துறையில் பயிலும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதனுடன், மாணவர்கள் கல்லூரியின் செயற்பாடுகளையும் பார்வையிட்டதோடு, வெளிக்கள செயற்பாடுகளிலும் கலந்துகொண்டனர்.





மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.