VCOT Introduction to AI Tools and Effective Prompting செயலமர்வு
27.06.2026 அன்று விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் புதுக்குடியிருப்பு கிளையில், “Introduction to AI Tools and Effective Prompting” என்ற தலைப்பில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான செயலமர்வு வெற்றிகரமாக நடைபெற்றது.
இன்றைய டிஜிட்டல் உலகில் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதனை கல்வி, தொழில் மற்றும் அன்றாட பணிகளில் திறம்பட பயன்படுத்துவதற்கான அறிவை வழங்கும் நோக்கில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பயிற்சியின் போது, ஆவணத் தயாரித்தல், மின்னஞ்சல் மேலாண்மை, தரவு பகுப்பாய்வு, உள்ளடக்க உருவாக்கம் மற்றும் AI தொழில்நுட்பத்தின் பல்வேறு பயன்பாடுகள் தொடர்பில் செயன்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், AI கருவிகளிலிருந்து துல்லியமான மற்றும் பயனுள்ள பெறுபேறுகளைப் பெற Effective Prompting தொடர்பான நடைமுறைப் பயிற்சிகளும் இடம்பெற்றன.




இச்செயலமர்வில் 18 பேர் கலந்துகொண்டு, பல்வேறு AI கருவிகளை பயன்படுத்தும் முறைகள், அவற்றின் நன்மைகள் மற்றும் தொழில்முறை பணிகளில் அவற்றை திறம்பட ஒருங்கிணைக்கும் வழிமுறைகள் தொடர்பாக பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டனர்.
பங்கேற்பாளர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தி, எதிர்கால தொழில்நுட்ப உலகிற்கு அவர்களை தயார்படுத்தும் நோக்கில் இவ்வாறான AI செயலமர்வுகளை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.