வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்த கோரிக்கை Uncategorized

வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்த கோரிக்கை

1 min read
💬 0

இலாபத்தில் இயங்கி வந்த 4 உள்ளூர் சீனி ஆலைகள் கடும் நிதி நெருக்கடியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சாலை நிர்வாகம் கூறுகிறது. இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனிக்கு VAT மற்றும் சமூகப் பாதுகாப்பு வரிகளில் இருந்து அரசாங்கம் விலக்கு அளித்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிரவுன் சீனிக்கு மட்டும் அந்த வரிகளை விதித்ததே இதற்கு முக்கியக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலைமை காரணமாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிரவுன் சீனி கிலோ ஒன்றின் விலை 325 முதல் 350 ரூபா வரையிலும், இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி கிலோ ஒன்றின் விலை 225 முதல் 250 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளது.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1656 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.