உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை எவ்வளவு தெரியுமா? ஆரோக்கியம்

உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை எவ்வளவு தெரியுமா?

1 min read
💬 0
⚠️
முக்கிய அறிவிப்பு | Health Disclaimer இந்தக் கட்டுரையில் வழங்கப்படும் தகவல்கள் கல்வி மற்றும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது. எந்தவொரு சிகிச்சையையும் தொடங்குவதற்கு முன் தகுதிவாய்ந்த மருத்துவ நிபுணரை அணுகவும்.
This content is for educational purposes only. Consult a qualified healthcare professional before trying any remedies.

உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை எவ்வளவு தெரியுமா?

பலரும் தங்கள் எடையில் அதிக கவனத்தோடு இருப்பார்கள். காரணம், எடைதான் நம் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது என்று அவர்கள் நினைப்பதுண்டு. ஆனால் எடை எண்ணை மட்டும் வைத்து ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். ஒருவரின் உயரம், வயது, உடல் அமைப்பு மற்றும் தசை அளவு போன்ற பல காரணிகள் ஆரோக்கியமான எடையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இருப்பினும், உயரத்திற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட எடை வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. உயரத்திற்கு ஏற்ற சமச்சீரான எடையைப் பராமரிப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேண உதவும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. அந்தவகையில் என்ன உயரத்துக்கு, என்ன எடையில் இருக்க வேண்டும், அதை எப்படி கணக்கிடுவது என்று இங்கே பார்க்கலாம்.

உயரத்துக்கு ஏற்ற எடை – எப்படி கணக்கிடுவது? இதற்கு உங்கள் உடல் எடையை (கிலோகிராமில்), உங்கள் உயரத்தின் (மீட்டரில்) 2 மடங்கை வைத்து (உயரம் × உயரம்) வகுக்க வேண்டும். இந்த எண், 18.5-க்கு கீழ் இருந்தால் நீங்கள் குறைந்த எடை கொண்டவர். சத்தான உணவுகளைச் சாப்பிட்டு எடையை அதிகரிக்க வேண்டும். இதுவே 18.5 முதல் 24.9 வரை இருந்தால் நீங்கள் சரியான எடை கொண்டவர். உங்கள் உடல்நிலை மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. ஒருவேளை 25.0 முதல் 29.9 வரை இருந்தால்: நீங்கள் அதிக எடை கொண்டவர். இவர்கள் உடற்பயிற்சி மூலம் எடையைக் குறைக்க ஆரம்பிக்க வேண்டும். இதற்கும் மேல், அதாவது 30.0-க்கு மேல் இருந்தால் அது அதீத உடல் பருமன் ஆகும். சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பாதிப்புகள் வராமல் தடுக்க உடனடியாக மருத்துவ ஆலோசனையுடன் எடையைக் குறைக்க வேண்டும்.

உங்கள் உயரத்துக்கு நீங்கள் எவ்வளவு எடை இருக்க வேண்டும்? பொதுவான மதிப்பீடுகளின்படி, 5 அடி அல்லது 152 சென்டிமீட்டர் உயரம் உள்ள பெண்களுக்கு உகந்த எடை வரம்பு 45 முதல் 54 கிலோ ஆகும். 5 அடி 2 அங்குலம் அல்லது 157 சென்டிமீட்டர் உயரம் உள்ள பெண்களுக்கு உகந்த எடை வரம்பு 49 முதல் 59 கிலோ ஆகும், மேலும் 5 அடி 4 அங்குலம் அல்லது 162 சென்டிமீட்டர் உயரம் உள்ள பெண்களுக்கு உகந்த எடை வரம்பு 54 முதல் 64 கிலோ ஆகும்.


5 அடி 6 அங்குலம் அல்லது 167 சென்டிமீட்டர் உயரம் உள்ள பெண்களுக்கு உகந்த எடை வரம்பு 59 முதல் 68 கிலோ வரையிலும், 5 அடி 8 அங்குலம் அல்லது 173 சென்டிமீட்டர் உயரம் உள்ளவர்களுக்கு 63 முதல் 73 கிலோ வரையிலும், மற்றும் 5 அடி 10 அங்குலம் அல்லது 178 சென்டிமீட்டர் உயரம் உள்ள பெண்களுக்கு 68 முதல் 79 கிலோ வரையிலும் ஆகும்.

ஆண்களில் 5 அடி 4 அங்குலம் அல்லது 162 செ.மீ உயரம் உள்ளவர்கள் 56 முதல் 67 கிலோ வரையிலும், 5 அடி 6 அங்குலம் அல்லது 167 செ.மீ உயரம் உள்ளவர்களுக்கு 61 முதல் 72 கிலோ வரையிலும், 5 அடி 8 அங்குலம் அல்லது 173 செ.மீ உயரம் உள்ளவர்களுக்கு 65 முதல் 77 கிலோ வரையிலும் உகந்த எடையாகும். 5 அடி 10 அங்குலம் அல்லது 178 செ.மீ உயரம் உள்ள ஆண்களுக்கு 69 முதல் 83 கிலோ வரையிலும், 6 அடி அல்லது 183 செ.மீ உயரம் உள்ளவர்களுக்கு 72 முதல் 89 கிலோ வரையிலும், மற்றும் 6 அடி 2 அங்குலம் அல்லது 188 செ.மீ உயரம் உள்ளவர்களுக்கு 79 முதல் 95 கிலோ வரையிலும் இயல்பான வரம்பாகக் கருதப்படுகிறது.

குறிப்பு: எப்போதுமே எடை மட்டுமே நம் ஆரோக்கியத்தை தீர்மானிக்காது. BMI எனப்படும் மேற்குறிப்பிட்ட எடையில் இல்லாவிட்டாலும் உடலில் ரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு, யூரிக் அமிலம் அளவு போன்றவை சரியாக இருந்து, இடுப்பின் சுற்றளவும் அதிகம் இல்லையென்றால் (தொப்பை குறைவு) நிச்சயம் நீங்கள் ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள்.

பொறுப்புத் துறப்பு: இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும். News18Tamilnadu இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1670 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.