பிரேக்கிங்

முக்கிய செய்திகள்

‘AI for Office Productivity ’ எனும் தலைப்பிலான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை

‘AI for Office Productivity ’ எனும் தலைப்பிலான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை
‘AI for Office Productivity ’ எனும் தலைப்பிலான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை

‘AI for Office Productivity ’ எனும் தலைப்பிலான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை, Haniel Child Development Project இன் கீழ் கடமையாற்றும் பணியாளர்களுக்காக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் 01.09.2026 அன்று வாழைச்சேனை, மருதநகர் பகுதியில் நடைபெற்றது.

காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் 29 பேர் கலந்துகொண்டனர்.

அலுவலகப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை திறம்படப் பயன்படுத்துவதன் மூலம் பணிகளின் வேகம், துல்லியம் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இப்பயிற்சி வழங்கப்பட்டது.

இதன்போது, AI உதவியுடன் ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை விரைவாகத் தயாரித்தல், தொழில்முறை மின்னஞ்சல்களை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல், தரவு பகுப்பாய்வு, விளக்கக்காட்சி (Presentation) தயாரித்தல் உள்ளிட்ட அலுவலகப் பணிகளில் AI கருவிகளைப் பயன்படுத்தும் முறைகள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மேலும், அன்றாட அலுவலகப் பணிகளை நவீன AI கருவிகளின் உதவியுடன் விரைவாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ளும் நடைமுறைகள் தொடர்பிலும் செயன்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன.

டிஜிட்டல் மாற்றத்திற்கு ஏற்ப பணியாளர்களின் தொழில்நுட்ப அறிவையும் அலுவலகப் பணித்திறனையும் மேம்படுத்தும் வகையில் இப்பயிற்சி அமைந்திருந்தது.

அலுவலக உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், நவீன தொழில்நுட்பங்களைப் பணிச்சூழலில் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கும் தேவையான AI திறன்களை வளர்க்கும் நோக்கில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி இவ்வாறான திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

வேலைவாய்ப்பு